
சென்னை,
கார்த்திக்கு ஜோடியாக 'விருமன்' படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் அதிதி சங்கர். இவர் இயக்குனர் சங்கரின் மகளாவார். அதனைத்தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் 'மாவீரன்' படத்தில் நடித்திருந்தார். நடிப்பு மட்டும் இல்லாமல் விருமன் படத்தில் 'மதுர வீரன்' மற்றும் 'மாவீரன்' படத்தில் 'வண்ணாரப்பேட்டை' பாடல்களையும் பாடி ரசிகர்களை ஈர்த்தார்.
சமீபத்தில், , விஷ்ணுவர்தன் இயக்கத்தில் வெளியான 'நேசிப்பாயா' படத்தில் ஆகாஷ் முரளிக்கு ஜோடியாக இவர் நடித்திருந்தார். இதுமட்டுமில்லாமல் தெலுங்கிலும் அதிதி சங்கர் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இதன்மூலம் இவர் தெலுங்கில் அறிமுகமாக இருக்கிறார்.
விஜய் கனகமெடலா இயக்கி வரும் இப்படத்திற்கு 'பைரவம்' என பெயரிடப்பட்டுள்ளது. இதில் பெல்லம்கொண்டா சாய் சீனிவாஸ் கதாநாயகனாக நடிக்கிறார். சமீபத்தில், இப்படத்தின் டீசர் வெளியாகி இருந்தநிலையில், தற்போது தீம் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.