"லெக் பீஸ்" படத்தின் டிரெய்லர் நாளை வெளியீடு

5 hours ago 2

சென்னை,

தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும், கதையின் நாயகனாகவும் நடித்து வரும் யோகி பாபு முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'லெக் பீஸ்' எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற 'டிக்கிலா டிக்கிலா.'எனும் முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் ஸ்ரீநாத் இயக்கத்தில் உருவாகி வரும் 'லெக் பீஸ்' எனும் திரைப்படத்தில் யோகி பாபு , வி டி வி கணேஷ் , ரவி மரியா, மொட்டை ராஜேந்திரன், கருணாகரன், ரமேஷ் திலக், மைம் கோபி, ஜான் விஜய், சரவண சுப்பையா, சாம்ஸ் , மதுசூதன் ராவ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மாசாணி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பிஜோர்ன் சுர ராவ் இசையமைத்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தை ஹீரோ சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சி. மணிகண்டன் தயாரித்திருக்கிறார்.

'லெக் பீஸ்' படம் வரும் மார்ச் மாதம் ஏழாம் தேதி வெளியாகிறது.

இந்நிலையில் 'லெக் பீஸ்' படத்தின் டிரெய்லர் நாளை வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. படத்தின் டிரெய்லரை நடிகர் விஷால் நாளை மாலை 4:30 மணிக்கு வெளியிட உள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளது.

The trailer of #LegPiece will be released by @VishalKOfficial Tomorrow @ 4:30 PM. Stay Tuned ! @NewMusicIndia Releasing in cinemas on March 7th @Actor_Srinath @iYogiBabu #Karunakaran @thilak_ramesh @Bjornsurrao #HeroCinemas @kalakkalcinema @prosathish @S2MediaOffl pic.twitter.com/miPgB4dgzh

— New Music (@NewMusicIndia) February 23, 2025
Read Entire Article