இணையதள சேவை பாதிப்பு இண்டிகோ விமானங்கள் தாமதம்

3 months ago 23

சென்னை: இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் இணையதள சேவை நாடு முழுவதும் பாதிக்கப்பட்டது. இதனால் சென்னை விமான நிலையத்தில் ‘‘போர்டிங் பாஸ்” வழங்குவது தாமதம் ஏற்பட்டு, இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன. இந்தியா முழுவதும் உள்ள இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் இணையதள சர்வர் நேற்று திடீரென பாதிப்படைந்துள்ளது. இதையடுத்து சென்னை விமான நிலையத்திலும், நேற்று பகல் 1 மணி முதல் சென்னையில் இருந்து புறப்படும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான பயணிகளுக்கு இணையதளம் மூலம் போர்டிங் பாஸ் கொடுப்பதில் பிரச்னை ஏற்பட்டது.
இதனால் அவசர ஏற்பாடாக, போர்டிங் பாஸ் கையினால் எழுதி கொடுக்கும் முறை தொடங்கியுள்ளது.

இதனால் சென்னையில் இருந்து புறப்படும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானங்களான திருச்சி, டெல்லி, பெங்களூரு, அகமதாபாத், ஹூப்ளி, கோவா, சீரடி, மும்பை, புனே, கோவை, மதுரை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன. இதுகுறித்து சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், ‘‘இண்டிகோ ஏர்லைன்ஸ் இணையதள சேவை மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளது. மற்ற அனைத்து விமான நிறுவன விமான சேவைகளும் வழக்கம்போல் இயங்கின. இண்டிகோ ஏர்லைன்சை பொறுத்தமட்டில் சென்னையில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் இணையதள சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. அதை சீர் செய்யும் பணிகள் நடந்து கொண்டு இருக்கிறது என தெரிவித்தனர்.

 

The post இணையதள சேவை பாதிப்பு இண்டிகோ விமானங்கள் தாமதம் appeared first on Dinakaran.

Read Entire Article