இடத்தகராறில் ஏற்பட்ட சண்டையை விலக்க முயன்றவர் மயங்கி விழுந்து பரிதாப சாவு: தாக்குதலில் உயிரிழந்தாரா? போலீசார் விசாரணை

2 weeks ago 3

கூடலூர்,ஏப்.26: கூடலூரை அடுத்த நந்தட்டி இந்திரா நகர் பகுதியில் வசித்தவர் தம்பிராஜ் (57). இவர் கூடலூர் உள்ள தனியார் கேஸ் ஏஜென்சி ஒன்றில் விற்பனையாளராக பணிபுரிந்து வந்துள்ளார். தம்பிராஜ் வசிக்கும் வீட்டில் இருந்து சுமார் 100 மீட்டர் தூரத்தில் தம்பிராஜின் மகன் விஜயகுமார்(28) தனியாக வசித்து வந்தார். இவரது வீட்டை ஒட்டி தம்பிராஜின் மனைவியின் தம்பி ராஜமூர்த்தி(48)க்கு சொந்தமான நிலம் உள்ளது. நிலம் தொடர்பாக விஜயகுமாருக்கும் ராஜமூர்த்திக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை சுமார் 6.30 மணியளவில் தம்பிராஜின் மகன் மற்றும் கிருஷ்ணமூர்த்தி இடையே தகராறு ஏற்பட்டு சத்தம் கேட்டதாகவும்,அப்போது வீட்டில் இருந்த தம்பிராஜ் சத்தம் கேட்டு அங்கு சென்று இருவரையும் சமாதானப்படுத்த முயன்றதாகவும், சம்பவத்தின் போது தம்பிராஜ் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.

தகவல் அறிந்த கூடலூர் போலீசார் சம்பவ இடத்தில் இருந்து தம்பிராஜின் உடலை மீட்டு கூடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.தம்பிராஜை ராஜ மூர்த்தி கட்டையால் தாக்கியதால் அவர் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் ராஜமூர்த்தி மற்றும் விஜயகுமார் ஆகியோரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இறந்த தம்பிராஜின் உடலில் காயங்கள் எதுவும் இல்லாததால் சந்தேக மரணம் என்ற அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும்,பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்னரே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post இடத்தகராறில் ஏற்பட்ட சண்டையை விலக்க முயன்றவர் மயங்கி விழுந்து பரிதாப சாவு: தாக்குதலில் உயிரிழந்தாரா? போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Read Entire Article