போர் எதிரொலி காரணமாக உணவகம், திரையரங்குகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு: சென்னை காவல் ஆணையர் அருண் பேட்டி

3 hours ago 2

சென்னை: போர் எதிரொலியாக உணவகம் மற்றும் திரையரங்குகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் அருண் தெரிவித்தார். சென்னை சேப்பாக்கத்தில் பத்திரிகையாளர் மன்றம் செயல்பட்டு வருகிறது. இந்த மன்றத்தின் சார்பாக தற்போது பத்திரிக்கையாளர்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. பத்திரிக்கையாளர் மன்றத்தில், உணவகத்தை சென்னை காவல் ஆணையர் அருண் திறந்து வைத்து, பத்திரிக்கையாளர்களிடம் கலந்துரையாடினார்.

அப்போது அவர் கூறியதாவது:
இந்த மாதத்தில் இரண்டாவது உணவகத்தை திறந்து வைத்துள்ளோம். காவல் ஆணையர் அலுவலகத்தில் முறையான உணவு கிடைக்கவில்லை என புகார் எழுந்த நிலையில் அங்கு ஒரு உணவகத்தை தொடங்கி வைத்தோம். தற்போது பத்திரிக்கையாளர்களுக்கென அமைக்கப்பட்டுள்ள உணவகத்தை திறந்து வைத்துள்ளேன்.
நான் சென்னைக்கு 2004 காலத்தில் வந்தேன், 20 வருடங்களாக பயணித்து வருகிறேன். முன்பெல்லாம் போலி பத்திரிக்கையாளர்கள் அதிகம் இருந்தனர். தற்போது போலி பத்திரிக்கையாளர்களெல்லாம் அடையாளம் கண்டு, அவர்களை சென்னை பத்திரிக்கையாளர் மன்ற நிர்வாகிகள் நீக்கியுள்ளனர். அனைத்து துறையிலும் மூன்றில் ஒரு பங்கு பெண்கள் இருப்பார்கள்.

செய்தி துறையில் மட்டும் பெண்கள் வருகை குறைவாக உள்ளது. செய்தி துறையை பொறுத்தவரை மற்ற மாநிலங்களை பார்க்கும் போது தமிழ்நாட்டில் பெண்களின் வருகை குறைவு. சென்னையில் ஏஐ கேமரா அமைக்க உள்ளோம். கேமரா உள்ள பகுதிகளில் ஏதேனும் தவறு நடந்தால் அலாரம் ஒலிக்கும். இந்தியா-பாகிஸ்தான் போரின் எதிரொலியாக நகரில், உணவகம் மற்றும் திரையரங்குகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.

The post போர் எதிரொலி காரணமாக உணவகம், திரையரங்குகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு: சென்னை காவல் ஆணையர் அருண் பேட்டி appeared first on Dinakaran.

Read Entire Article