சென்னை: சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாடு இன்று ஞாயிற்றுக் கிழமை மாலை 4 மணி முதல் கிழக்குக் கடற்கரைச் சாலையில் மாமல்லபுரத்தை ஒட்டிய திருவிடந்தை கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள மாநாட்டுத் திடலில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி, வன்னியர் சங்கம் ஆகியவற்றின் தலைவர்கள் இம்மாநாட்டில் பங்கேற்று உரையாற்றுகின்றனர். மேலும் பல்வேறு கலைநிகழ்சிகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த மாநாட்டிற்காக 50 ஏக்கர் பரப்பளவில் மேடை மற்றும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மாநாட்டுக்கு திரளாக வரவுள்ள தொண்டர்களும் நிர்வாகிகளும், காவல் துறையின் வழிகாட்டுதல்களை பின்பற்றி அமைதியாகவும் ஒழுங்காகவும் நடந்து கொள்ள வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் காவல் துறை விதித்த கட்டுப்பாடுகளின் பேரில், தென் மாவட்டங்களிலிருந்து வரும் வாகனங்களுக்கு கிழக்கு கடற்கரை சாலையில் செல்ல அனுமதி இல்லை. அவர்கள் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக மாநாட்டுக்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
The post மாமல்லபுரத்தில் இன்று பாமக சித்திரை முழுநிலவு மாநாடு appeared first on Dinakaran.