
பெங்களூரு,
'ஷேப் ஆப் யூ', 'பெர்பெக்ட்' உள்ளிட்ட பாடல்கள் மூலம் புகழ்பெற்றவர் இசைக் கலைஞர் எட் ஷீரன். இவர் சமீபத்தில் சென்னையில் இசை நிகழ்ச்சி நடத்தினார். இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கலந்து கொண்டார்.
இதனைத்தொடர்ந்து, கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இசை நிகழ்ச்சி நடத்தினார். அப்போது ஜூனியர் என்டிஆர் நடித்த தேவரா படத்திலிருந்து பத்தவைக்கும் என்ற பாடலை பாடகி ஷில்பா ராவுடன் இணைந்து தெலுங்கில் பாடினார்.
இது அங்கிருந்த அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில், எட் ஷீரனை ஜூனியர் என்டிஆர் பாராட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "இசைக்கு எல்லைகள் இல்லை, நீங்கள் அதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துவிட்டீர்கள் எட்! நீங்கள் தெலுங்கில் 'சுத்தமல்லே' பாடுவதைக் கேட்பது உண்மையிலேயே சிறப்பு' இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.
