இங்கிலாந்து ஒருநாள், டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக ஹாரி புரூக் தேர்வு

4 hours ago 2

லண்டன்,

இங்கிலாந்து ஒருநாள், டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக ஜோஸ் பட்லர் செயல்பட்டு வந்தார். இதனிடையே, 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இங்கிலாந்து அணி தோல்வியடைந்தது. இந்த தோல்வியை தொடர்ந்து கேப்டன் பதவியில் இருந்து ஜோஸ் பட்லர் விலகினார். இதையடுத்து, புதிய கேப்டனை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வந்தது.

இந்நிலையில், இங்கிலாந்து ஒருநாள், டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக ஹாரி புரூக் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 26 வயதான ஹாரி புரூக் 2022 ஜனவரி மாதம் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான தொடரில் இங்கிலாந்து அணியில் முதல்முறையாக இடம்பிடித்தார். அவர் இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் அணியின் துணை கேப்டனாக செயல்பட்டு வந்தார். ஹாரி புரூக் இங்கிலாந்து அணிக்காக இதுவரை 26 ஒருநாள் போட்டிகள், 44 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.   

Read Entire Article