ஐ.பி.எல். 2025: தொடர்ந்து சொதப்பும் ரோகித்.. 17 ரன்களில் அவுட்

17 hours ago 4

மும்பை,

18-வது ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்று வரும் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடி வருகின்றன. வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 221 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக விராட் கோலி 67 ரன்களும், ரஜத் படிதார் 64 ரன்களும் அடித்தனர். மும்பை தரப்பில் அதிகபட்சமாக ஹர்திக் மற்றும் டிரெண்ட் போல்ட் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதனையடுத்து 222 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் - ரியான் ரிக்கல்டன் களமிறங்கினர்.

இதில் ஆரம்பத்திலேயே அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா 9 பந்துகளில் 17 ரன்கள் அடித்த நிலையில் யாஷ் தயாள் பந்தில் போல்டானார். நடப்பு தொடரில் 4 போட்டிகளில் விளையாடியுள்ள ரோகித் வெறும் 38 ரன்கள் மட்டுமே அடித்து தொடர்ந்து சொதப்பி வருகிறார்.

தற்போது வரை மும்பை அணி 4 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 38 ரன்கள் அடித்துள்ளது.

Read Entire Article