இ.கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் துணைவேந்தர்கள் மாநாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

2 weeks ago 2

தஞ்சாவூர், ஏப்.26: உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக துணைவேந்தர் மாநாட்டை நடத்தும் ஆளுநரையும், வருகை தரும் துணை ஜனாதிபதியையும் கண்டித்து தஞ்சாவூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி துணைவேந்தர்கள் மாநாடு நடத்துவதை கண்டித்தும், இந்த மாநாட்டை துவக்கி வைக்க வருகை தரும் துணை ஜனாதிபதி ஜகதீஷ் தன்கரை திரும்பி செல்ல வலியுறுத்தியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டது. இதையடுத்து தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தெற்கு மாவட்டம் சார்பில் கருப்பு கொடி கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலாளர் முத்து உத்திராபதி தலைமையில் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தின் நோக்கத்தை விளக்கி மாவட்ட துணைச் செயலாளர் சக்திவேல், மாவட்ட பொருளாளர் பாஸ்கர், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் சந்திரகுமார், வீரமோகன், திருநாவுக்கரசு, பன்னீர்செல்வம், ராமச்சந்திரன் ஆகியோர் உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் விஜயலட்சுமி, கண்ணகி, சரோஜா, ஒன்றிய செயலாளர்கள் பூதலூர் முகில், காந்தி, தஞ்சாவூர் குணசேகரன், ஒரத்தநாடு வாசு, இளையராஜா, பட்டுக்கோட்டை பூபேஸ்குப்தா, மதுக்கூர் முத்துராமன், திருவோணம் பால்ராஜ், தஞ்சாவூர் மாநகர செயலாளர் முத்துக்குமாரன், பொருளாளர் கல்யாணி, ஏஐடியுசி மாவட்ட தலைவர் சேவையா, மாவட்ட செயலாளர் துரை.மதிவாணன், மாவட்ட பொருளாளர் கோவிந்தராஜன், ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க மாவட்ட தலைவர் அழகு தியாகராஜன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

The post இ.கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் துணைவேந்தர்கள் மாநாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article