சென்னை: இந்தியர்களாய் ஒன்றுபட்டு தீவிரவாதத்தை முறியடிப்போம் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கூறியுள்ளது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பொதுச் செயலாளர் ஏ.முஜீபுர் ரஹ்மான் நேற்று வெளியிட்ட அறிக்கை: போர் பதற்றம் அதிகரித்து வரும் இச்சூழலில் எல்லையில் காவல் காக்கும் நம் நாட்டு ராணுவ வீரர்களின் பணி மகத்தானது. அவர்களோடு இந்திய முஸ்லிம்கள் அனைவரும் துணை நிற்பார்கள். சுதந்திரத்திற்கு முன் நாட்டை காத்தது போல், தற்போதும் முஸ்லிம் ராணுவ வீரர்கள் உயிரை துச்சமாக மதித்து நாட்டிற்காக களத்தில் நிற்கிறார்கள்.
எனவே சுதந்திரப் போராட்டம் நடைபெற்ற போது ஆங்கிலேயனின் பக்கம் நின்றவர்கள் முஸ்லிம்களின் தேசப்பற்றை நிரூபிக்க சொல்வது வெட்க கேடு. நாடு இரண்டாக பிரிந்த நிலையில் எங்கள் வீடும் எங்கள் நாடும் இந்தியா தான் என்று உறுதியை வெளிப்படுத்தி இங்கேயே இருந்த முஸ்லிம்கள் இப்போதும் மாறாத அதே தேச பற்றுறுதியுடன் இருக்கின்றோம். பாகிஸ்தான் எல்லைமீறி தாக்குதல் தொடுத்தால் இந்திய மக்கள் அனைவரும் தான் பாதிக்கப்படுவோம். அத்தகைய நெருக்கடியான சூழலில் மததுவேஷத்திற்கு ஆட்படாமல் இந்தியர்களாய் ஒன்றுபடுவோம். தீவிரவாதத்தை முறியடிப்போம்.
The post இந்தியர்களாக ஒன்றுபட்டு தீவிரவாதத்தை முறியடிப்போம்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேண்டுகோள் appeared first on Dinakaran.