சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் பிரமாண்ட மக்கள் பேரணிக்கு கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘‘பாகிஸ்தானிய ராணுவ ஆக்கிரமிப்பு செயல்களுக்கு எதிராக நாட்டை துணிச்சலுடனும் வெற்றிகரமாகவும் பாதுகாக்கும் இந்திய ஆயுதப் படைகளுடன் நமது 8 கோடி தமிழ்நாட்டு மக்களின் தெளிவான ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் பிரம்மாண்டமான மக்கள் பேரணியை நடத்தியதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மனமார்ந்த நன்றிகள். நமது ஆயுதப் படைகளுடன் நமது தேசம் ஒற்றுமையாகவும் உறுதியாகவும் துணைநிற்பது, பயங்கரவாதத்தின் அனைத்து முனைகளையும் அழித்தொழித்து நமது தேசிய இறையாண்மையைப் பாதுகாப்பதற்கான நமது ஈடுபாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது” என்று கூறியுள்ளார்.
The post ராணுவத்துக்கு ஆதரவாக பிரமாண்ட மக்கள் பேரணி; முதல்வருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து appeared first on Dinakaran.