இ.கம்யூ, மாவட்டக் குழு கூட்டம்

1 month ago 6

 

சிவகங்கை, பிப்.10: சிவகங்கையில் இ.கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு கூட்டம் நடைபெற்றது. கல்லல் ஒன்றிய செயலாளர் குணாளன் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினரும் முன்னாள் எம்எல்ஏ ராமசாமி, சிவகங்கை மாவட்ட செயலாளர் சாத்தையா பேசினர்.

மாவட்ட துணைச் செயலாளர் மருது, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் காமராஜ், ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க மாவட்ட செயலாளர் மாரி, மாவட்ட பொருளாளர் மணவாளன், நகர செயலாளர் சகாயம், ஒன்றிய செயலாளர்கள் சங்கையா, செல்வம், மோகன், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் முருகேசன் மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

சிவகங்கை பகுதியில் அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிர் காக்கும் பிரிவுகளில் தேவையான உபகரணங்கள், மருத்துவர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

The post இ.கம்யூ, மாவட்டக் குழு கூட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article