கொழும்பு,
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வரும் 29-ம் தேதி காலே மைதானத்தில் தொடங்க உள்ளது.
இந்நிலையில் இந்த தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தனஞ்சயா டி சில்வா தலைமையிலான அந்த அணியில் 18 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இலங்கை அணி விவரம் பின்வருமாறு:-
தனஞ்சயா டி சில்வா (கேப்டன்), திமுத் கருணாரத்னே, நிசங்கா, ஓஷடா பெர்னாண்டோ, லஹிரு உதார, தினேஷ் சண்டிமால், ஏஞ்சலோ மத்தியூஸ், கமிந்து மெண்டிஸ், குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரமா, சோனல் தனுஷா, பிரபாத் ஜெயசூர்யா, ஜெப்ரி வாண்டர்சே, நிஷான் பெய்ரிஸ், அசிதா பெர்னண்டோ, விஷ்வா பெர்னண்டோ, லஹிரு குமரா மற்றும் மிலன் ரத்னாயகே.