ஆஸ்திரேலியா அருகே வானாட்டு தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 14 பேர் பலி

2 months ago 11

ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலியா அருகே வானாட்டு தீவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 14 பேர் உயிரிழந்த நிலையில் நூற்றுக்கணக்கானோர் காயம் அடைந்துள்ளனர். வானாட்டு தீவு தலைநகர் போர்ட் விலாவை மையமாக கொண்டு நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது அது ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆக பதிவாகியது. மதியம் 1 மணிக்கு முன்னதாக நிலநடுக்கம் ஏற்பட்டது. 35 மைல் ஆழத்தில் மக்கள் வசிக்கும் 80 தீவுகளின் குழுவான வனுவாட்டுவின் மிகப்பெரிய நகரமான போர்ட் விலாவிற்கு மேற்கே 19 மைல் தொலைவில் அமைந்திருந்தது.

நிலநடுக்கம் ஏற்பட்ட இரண்டு மணி நேரத்திற்குள் சுனாமி எச்சரிக்கை கைவிடப்பட்டது, அதைத் தொடர்ந்து பெரிய நில அதிர்வுகள் ஏற்பட்டன. இத்தகைய நில அதிர்வால் நிலச்சரிவுகள் ஏற்பட்டு கார்கள் நசுக்கப்பட்டன மற்றும் பல மேற்கத்திய தூதரகங்கள் உள்ள வளாகம் உட்பட பல கட்டிடங்களை தரைமட்டமாக்கியது. நாடு முழுவதும் மின்சாரம் மற்றும் மொபைல் நெட்வொர்க்குகள் துண்டிக்கப்பட்டதால் சேதத்தின் முழு விவரம் தெரியவில்லை. இந்த நிலையில் இன்றைய தினம் இறப்பு குறித்து அதிகார பூர்வமான அறிவிப்பை பசிபிக் பிராந்தியத்தின் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் வெளியிட்டது அதில், 14 பேர் உயிரிழந்ததாகவும் 200க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததாவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

The post ஆஸ்திரேலியா அருகே வானாட்டு தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 14 பேர் பலி appeared first on Dinakaran.

Read Entire Article