டெல்லி: நாடாளுமன்றத்தில் சிறந்த பங்களிப்பை அளித்தமைக்காக, திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் C.N.அண்ணாதுரைக்கு சன்சத் ரத்னா தேசிய விருது அறிவித்துள்ளது. ஜூலை மாதம் டெல்லியில் நடைபெறும் சன்சத் ரத்னா விருதளிப்பு குழுவின் 15ம் ஆண்டு விழாவில் இவ்விருதுகள் வழங்கப்பட உள்ளன. தனிநபர் பிரிவில் 17 எம்.பி.க்களுக்கும், சிறப்புப் பிரிவில் 4 பேரும் தேர்வு செய்யப்பட்டு விருது பெறவுள்ளனர்.11 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டிற்கு இந்த விருது கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
The post 11 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டு எம்.பி.க்கு தேசிய விருது அறிவிப்பு appeared first on Dinakaran.