ஆளுநரை நீக்க கோரி ஏப். 25-ல் மார்க்சிஸ்ட் போராட்டம்

18 hours ago 3

சென்னை: ‘‘தமிழக ஆளுநர் ரவியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும், மத்திய அரசின் தமிழக விரோதப் போக்கை கண்டித்தும் வரும் 25-ம் தேதி முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும்’’ என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, அக்கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் வெளியிட்ட அறிக்கை: தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அரசியல் சாசன மாண்புக்கு விரோதமாகவும், தமிழக மக்களின் நலன்களுக்கு விரோதமாகவும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட 10 சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காததை உச்சநீதிமன்றம் கடுமையாகக் கண்டித்ததுடன் உச்சநீதிமன்றமே மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்தது.

Read Entire Article