சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: தமிழ்நாடு ஆளுநர்ஆர்.என்.ரவி சட்ட முன் வரைவுகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போடுகிறார். அரசமைப்புச் சட்ட நெறிமுறைகளை காலில் போட்டு மிதிக்கிறார். ஆர்.என்.ரவி ஆளுநர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்பதை மதிமுக தொடந்து வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் ஆளுநர் மாளிகையில் குடியரசு நாளில் நடைபெறும் நிகழ்வை மறுமலர்ச்சி திமுக புறக்கணிக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
The post ஆளுநரின் தேநீர் விருந்தை மதிமுக புறக்கணிக்கும்: வைகோ அறிவிப்பு appeared first on Dinakaran.