சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தை மதிமுக புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. ஆளுநர் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக ஏற்கெனவே காங்கிரஸ், கம்யூனிஸ்ட், வி.சி.க. ஆகிய கட்சிகள் அறிவித்தது. மாநில அரசின் செயல்பாடுகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இடையூறு விளைவித்து வருகிறார் என்றும் வைகோ குற்றசாட்டு வைத்தார். சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்பட்டுள்ள சட்ட முன் வரைவுகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் கிடப்பில் போடுகிறார். இந்துத்துவ சனாதன கோட்பாடுகளை பரப்புரை செய்யும் முகவராக ஆளுநர் ஆர்.என்.ரவி. செயல்பட்டு வருகிறார் என தெரிவித்தார்.
The post ஆளுநரின் தேநீர் விருந்து: மதிமுக புறக்கணிப்பு appeared first on Dinakaran.