ஆலங்குளம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தபாஜ மாஜி நிர்வாகி போக்சோவில் கைது

1 week ago 1

ஆலங்குளம், ஜன.29: ஆலங்குளம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாஜ மாஜி நிர்வாகி போக்சோவில் கைது செய்யப்பட்டார். தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே கடங்கனேரியை சேர்ந்தவர் பேச்சிமுத்து(55) இவர் பணம் கொடுக்கல், வாங்கல் ெதாழில் செய்து வருகிறார். முன்னாள் ஒன்றிய பாஜ விவசாய அணி தலைவராகவும் இருந்துள்ளார். இந்நிலையில் ஒரு வீட்டிற்கு கடனுக்கான வட்டி வசூலிக்க சென்றுள்ளார். அப்போது வீட்டில் 12 வயது சிறுமி மட்டும் தனியாக இருந்துள்ளார். உடனே பேச்சிமுத்து அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி கூச்சலிட்டதால் அங்கிருந்து பேச்சிமுத்து தப்பியோட முயன்றார். அக்கம் பக்கத்தினர் திரண்டு அவரை பிடித்து ஆலங்குளம் அனைத்து மகளிர் போலீசில் ஒப்படைத்தனர். மகளிர் போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து பேச்சிமுத்துவை கைது செய்தனர்.

The post ஆலங்குளம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தபாஜ மாஜி நிர்வாகி போக்சோவில் கைது appeared first on Dinakaran.

Read Entire Article