கின்ஷாசா:
மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு காங்கோ. அந்நாட்டின் மைடொபி மாகாணத்தில் பெமி என்ற ஆறு பாய்கிறது.
இந்நிலையில், மைடொபி மாகாணம் இங்கான்கோ நகரில் இருந்து அண்டை நகருக்கு பெமி ஆற்றில் இன்று படகு ஒன்று புறப்பட்டது. அந்த படகில் 100க்கும் மேற்பட்டோர் பயணித்தனர்.
ஆற்றில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றியதால் பாரம் தாங்காமல் படகு ஆற்றில் கவிழ்ந்தது. இந்த சம்பவத்தில் 25 பேர் உயிரிழந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் ஆற்றில் தத்தளித்தவர்களை மீட்டனர். ஆனால், மேலும் சிலரின் நிலை இதுவரை தெரியாததால் மீட்புப்பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் , பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.