ஆர்.கே.பேட்டை: பெஞ்சல் புயல் வலுவிழுந்த நிலையில், ஆர்.கே.பேட்டை அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் லேசான மற்றும் சாரல் மழை பெய்து வருகிறது. இந்த, சாரல் மழையில் மாணவர்கள் நனைந்தபடி பள்ளி சென்றனர். பெஞ்சல் புயல் தாக்கம் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து கனமழை மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மாலை பெஞ்சல் புயல் கரையை கடந்து வலுவிழந்ததாக வானிலை ஆய்வு மையம் சார்பில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று வழக்கம்போல் பள்ளி, கல்லூரிகள் செயல்படும் என்று மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் அறிவித்திருந்தார். அதன்படி மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்றனர். ஆனால், மாவட்டத்தில் காலை முதல் சாரல் மற்றும் மிதமான மழை பெய்து வருவதால், மாணவர்கள் மழையில் நனைந்தபடியும், குடை பிடித்துக்கொண்டும் பள்ளிக்கு சென்றனர். அப்போது, தொடர்ந்து பெய்த சாரல் மழையால் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து சென்ற பெற்றோர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
The post ஆர்.கே.பேட்டையில் சாரல் மழை appeared first on Dinakaran.