ஆர்.கே.பேட்டை அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை

4 weeks ago 5

ஆர்.கே.பேட்டை: ஆர்.கே.பேட்டை அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகைகள், பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை, போலீசார் தேடி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை அடுத்த ஜி.சி.எஸ்.கண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். மனைவி காவ்யா(30) மற்றும் மாமியார் சிலக்கம்மா ஆகியோருடன் வசித்து வருகிறார். இவர், வழக்கம்போல் நேற்று முன்தினம் காலை வீட்டிலிருந்து வெளியே சென்றவுடன் காவ்யா, சிலக்கம்மா ஆகியோர் வீட்டை பூட்டிக்கொண்டு அரக்கோணத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றனர். இந்நிலையில், நேற்று காலை கணேசனின் வீட்டின் பூட்டு மற்றும் கதவை உடைக்கப்பட்டிருந்ததை கண்ட அக்கம் பக்கத்தினர், இதுகுறித்து கணேசன், காவ்யா ஆகியோருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து கணவன், மனைவியும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த 5 சவரன் தங்க நகைகள், துணிகளுக்கு இடையே வைத்திருந்த 5 ஆயிரம் பணம் ஆகியவை திருடுபோய் இருந்தது. அதிர்ச்சியடைந்த தம்பதியினர் இதுகுறித்து ஆர்.கே.பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், திருவள்ளூரில் இருந்து கைரேகை நிபுணர், மோப்பநாய் வரவழைத்து வீட்டில் பரிசோதனை செய்தபோது, மோப்ப நாய் சிறிது தூரம் சென்றதும் நின்றுவிட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், வீட்டின் பூட்டை உடைத்து நகைகள், பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

The post ஆர்.கே.பேட்டை அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை appeared first on Dinakaran.

Read Entire Article