ஆரியங்காவில் கனமழையால் காட்டுப்பகுதியில் வெள்ளப்பெருக்கு நடுவழியில் 27 பயணிகளுடன் சிக்கி கொண்ட பேருந்து

4 weeks ago 6

*சாலையை கடக்க முடியாமல் 5 மணி நேரம் தவிப்பு

செங்கோட்டை : ஆரியங்காவில் கனமழை காரணமாக காட்டுபகுதியில் வெள்ள பெருக்கு ஏற்பட்டதால் சாலையை கடக்க முடியாமல் 5 மணி நேரம் நடுவழியில் 27 பயணிகளுடன் பேருந்து சிக்கி கொண்டதால் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆரியங்காவை ஒட்டிய ரோஸ்மாலா கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் மழை பெய்தது. இதனால் ஆரியங்காவு முதல் ரோஸ்மாலா வரையிலான 1- கிலோமீட்டர் வனப் பாதையில் பல இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

இதனால் மேகமூட்டம் மற்றும் நீர்வரத்தால் சாலையில் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்தது. நேற்று காலை 7.40 மணியளவில் ரோஸ்மாலாவில் இருந்து ஆரியங்காவுக்கு வந்த கேஎஸ்ஆர்டிடி பேருந்து சாலையைக் கடக்க முடியாமல் 5 மணி நேரம் காட்டுக்குள் சாலையில் நடுவழியில் சிக்கிக் கொண்டது.வனப்பகுதியில் இருந்து தண்ணீர் பெருக்கெடுத்து சாலையில் ஓடுவதாலும், மேகமூட்டத்தால் சாலையை கடக்க முடியாமல் சாலையில் பேருந்து அந்த இடத்திலேயே நின்றது.

பேருந்தில் ரோஸ்மாலாவைச் சேர்ந்த 15 மாணவர்கள் உட்பட 27 பயணிகள் இருந்தனர். குறித்த நேரத்தில் ஆரியங்காவுக்கு பஸ் வராததால் காட்டுப்பாதையில் பஸ் சிக்கியது தெரிய வந்தது. சிறிய சாலை என்பதால், இப்பகுதியில் வாகனங்கள் திரும்ப முடியவில்லை.

பின்னர் மதியம் 12.30 மணியளவில் சாலையில் தண்ணீர் வரத்து குறைந்ததால் புறப்பட்டு ஆரியங்காவு சென்றது. வழக்கமான வழித்தடமாக இருப்பதால் கவலைப்படவில்லை என்று கேஎஸ்ஆர்டிசி ஊழியர்கள் முருகாயி, சஜிதாமன் ஆகியோர் தெரிவித்தனர். காலையில் தேர்வெழுத முடியாத மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகம் மதியம் சிறப்பு ஏற்பாடுகளை செய்தது குறிப்பிடத்தக்கது.

The post ஆரியங்காவில் கனமழையால் காட்டுப்பகுதியில் வெள்ளப்பெருக்கு நடுவழியில் 27 பயணிகளுடன் சிக்கி கொண்ட பேருந்து appeared first on Dinakaran.

Read Entire Article