ஆட்டோமொபைல் துறையில் நீண்ட காலமாக தமிழ்நாடு நம்பர் ஒன் நிலையில் உள்ளது :அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பெருமிதம்

2 hours ago 2

சென்னை : சென்னை தலைமைச் செயலகத்தில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா செய்தியாளர் சந்திப்பு நடத்தினார். அப்போது பேசிய அவர், “முதலமைச்சரின் நல்லாட்சியில் தமிழ்நாடு தொடர்ந்து அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. தொழில்துறையில் நம்பர் ஒன் மாநிலமாக உள்ள தமிழ்நாடு, பல்வேறு துறைகளிலும் நம்பர் ஒன் மாநிலமாக வளர்ந்து வருகிறது. மின்சார வாகனங்கள் தொடர்பான ஆராய்ச்சி தமிழ்நாட்டில் நடைபெற வேண்டும் என்பதுதான் முதலமைச்சரின் நோக்கம் ஆகும். ஆட்டோமொபைல் துறையில் நீண்ட காலமாக தமிழ்நாடு நம்பர் ஒன் நிலையில் உள்ளது . மகிந்திரா நிறுவனத்தின் ஒட்டுமொத்த ஆராய்ச்சியும் தற்போது தமிழ்நாட்டில்தான் நடைபெறுகிறது. இந்தியாவில் விற்பனையாகும் மின்சார வாகனங்களில் 40% தமிழ்நாட்டில் உற்பத்தியாகிறது. இந்தியாவில் விற்பனையாகும் மின்சார இருசக்கர வாகனங்களில் 70% தமிழ்நாட்டில் உற்பத்தியாகிறது,”இவ்வாறு தெரிவித்தார்.

The post ஆட்டோமொபைல் துறையில் நீண்ட காலமாக தமிழ்நாடு நம்பர் ஒன் நிலையில் உள்ளது :அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பெருமிதம் appeared first on Dinakaran.

Read Entire Article