முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தில் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் ஓராண்டில் 2,636 பேருக்கு சிகிச்சை

2 hours ago 2

*மாநிலத்தில் மூன்றாமிடம் சாதனை

மன்னார்குடி : தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ், கடந்த ஓராண்டில் சிறந்த சேவை வழங்கியதில், மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, மாநிலத்தில் மூன்றாம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளது.

அரசு மருத்துவமனைகளில் தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் நடைபெற்ற அறுவை சிகிச்சைகளை கணக்கிட்டதில், கடந்தாண்டு ஜனவரி 11 முதல் டிசம்பர் 31 வரை காப்பீ ட்டு திட்டத்தின் மூலம் 2636 அறுவை சிகிச்சைகள் மற்றும் சிகிச்சைகள் செய்ததன் மூலம் ரூ.1 கோடியே96 லட்சத்து 19 ஆயிரத்து 925 தொகைக்கு மக்களைப் பயனடையச் செய்துள்ளது. இந்த சேவையை மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை வழங்கி, மாநிலத்திலேயே மூன்றாம் இடம் பெற்றுள்ளது.

இதனைப் பாராட்டி சென்னையில் நேற்று முன்தினம். நடைபெற்ற விழாவில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கலந்து கொண்டு மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையின் தலைமை மருத்துவர் டாக்டர் விஜயகுமாரிடம் இதற்கான சான்றிதழை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.அப்போது, சென்னை மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் மாநில இயக்குனர் டாக்டர் ஜெயராஜ மூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

மாநில அளவில் முதல் இடத்தை கடலூர், இரண்டாம் இடத்தை ஈரோடு, மருத்துவமனைகள் பெற்ற நிலையில், மூன்றாம் இடத்தை மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை பெற்றுள்ளது. இதன்மூலம், திருச்சி மண்டலத்திலேயே மன்னார்குடி மருத்துவமனை முதலிடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

The post முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தில் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் ஓராண்டில் 2,636 பேருக்கு சிகிச்சை appeared first on Dinakaran.

Read Entire Article