தஞ்சை: தஞ்சையில் ஆம்லெட் இல்லை என்றதால் ஓட்டலை சூறையாடிய இளைஞர்களை போலீசார் தேடி வருகின்றனர். தஞ்சையை சேர்ந்தவர் முகமது சலீம். இவர் வண்டிக்கார தெருவில் ஓட்டல் நடத்தி வருகிறார். நேற்று முன் தினம் இரவு அங்கு மதுபோதையில் வந்த 2 இளைஞர்கள் ஊழியர்களிடம் ஆம்ெலட் கேட்டனர். ஊழியர்கள் ஆம்லெட் இல்லை என கூறியதால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் அங்கிருந்த கட்டைகளை எடுத்து ஓட்டலில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கியதுடன், உணவு பொருட்களை சேதப்படுத்தி ஊழியர்களையும் தாக்கினர்.
இதில் உரிமையாளர் முகமது சலீமிற்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டது. இது குறித்து முகமது சலீம் அளித்த புகாரின்பேரில் கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து இரண்டு பேரையும் தேடி வருகின்றனர். அந்த 2 பேரும் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இவர்கள் ஓட்டலை அடித்து நொறுக்கும் காட்சி காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post ஆம்லெட் இல்லை என்றதால் ஓட்டலை இளைஞர்கள் சூறை: வீடியோ வைரல் appeared first on Dinakaran.