
பெங்களூரு,
10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த மார்ச் 22-ம் தேதி தொடங்கிய இந்த தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் 7 லீக் போட்டிகள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்று வாய்ப்பை உறுதி செய்து விட்டன.
முன்னதாக நடப்பு ஐ.பி.எல். சீசன் இந்தியா - பாகிஸ்தான் சண்டை காரணமாக ஒரு வார காலம் நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது ஐ.பி.எல். போட்டி தொடங்கினாலும் முந்தைய போட்டி அட்டவணையுடன் ஒப்பிடும்போது 9 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது மாற்றப்பட்ட புதிய அட்டவணைப்படி இறுதிப்போட்டி மே 25-க்கு பதிலாக ஜூன் 3-ந்தேதி நடைபெறுகிறது. இதனிடையே சர்வதேச போட்டிகளும் தொடங்க உள்ளதால் பல வெளிநாட்டு வீரர்கள் பிளே ஆப் சுற்றுகளை தவற விடுகின்ரனர்.
அந்த வரிசையில் பெங்களூரு அணியில் இடம்பெற்றுள்ள இங்கிலாந்து வீரரான ஜேக்கப் பெத்தேல் கடைசி லீக் ஆட்டம் மற்றும் பிளே ஆப் சுற்றிலிருந்து விலகியுள்ளார்.
அவருக்கு பதிலாக நியூசிலாந்து அதிரடி வீரரான டிம் சீபர்ட்டை மாற்று வீரராக பெங்களூரு ஒப்பந்தம் செய்துள்ளது.