ஆம் ஆத்மி 2வது வேட்பாளர் பட்டியல் டெல்லி தேர்தலில் தொகுதி மாறினார் சிசோடியா

1 month ago 4

புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் ஆம்ஆத்மி 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலில் சிசோடியா வேறு தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ளார். 70 உறுப்பினர்கள் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு வரும் பிப்ரவரி மாதம் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2015 முதல் அங்கு ஆட்சியில் இருக்கும் ஆம்ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சியை பிடிக்க தயாராகி வருகிறது. முதல்கட்டமாக 11 வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட ஆம்ஆத்மி நேற்று 20 பேர் கொண்ட 2வது பட்டியலை வெளியிட்டது. இதில் முன்னாள் துணை முதல்வர் சிசோடியா பெயர் இடம் பெற்று உள்ளது. அவர் தனது பட்பர்கஞ்ச் தொகுதியில் இருந்து மாறி ஜங்புரா தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ளார். சமீபத்தில் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்த கல்வியாளர் அவத் ஓஜா, பட்பர்கஞ்ச் தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ளார். பா.ஜவில் இருந்து விலகி ஆம்ஆத்மியில் சேர்ந்த ஜிண்டெண்டர் சிங் ஷண்டி நிறுத்தப்பட்டுள்ளார்.

The post ஆம் ஆத்மி 2வது வேட்பாளர் பட்டியல் டெல்லி தேர்தலில் தொகுதி மாறினார் சிசோடியா appeared first on Dinakaran.

Read Entire Article