ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடர்; வங்காளதேச அணி அறிவிப்பு

2 months ago 14

டாக்கா,

வங்காளதேசம் - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஷார்ஜாவில் நடைபெற உள்ளது. இந்த தொடர் வரும் 6ம் தேதி முதல் 11ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடரின் போட்டிகள் முறையே நவம்பர் 6, 9, 11 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

இந்நிலையில், இந்த தொடருக்கான வங்காளதேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு பின் கேப்டன் பதவியில் இருந்து ஷாண்டோ விலக உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.

ஆனால், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான வங்காளதேச அணி ஷாண்டோ தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மெஹதி ஹசன் மிராஸ் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

வங்காளதேச அணி விவரம்;

சவுமியா சர்கார், தன்சித் ஹசன் தமீம், ஜாகிர் ஹசன்ம் நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ (கேப்டன்), முஷ்பிகுர் ரஹீம், மஹ்மத்துல்லா ரியாத், தவ்ஹித் ஹிரிடோய், ஜேக்கர் அலி அனிக், மெஹதி ஹசன் மிராஸ் (துணை கேப்டன்), ரிஷாத் ஹொசைன், நசும் அகமது, தஸ்கின் அகமது, முஸ்தாபிசுர் ரஹ்மான், ஷோரிபுல் இஸ்லாம், நஹித் ராணா.

Read Entire Article