"ஆபிஸர் ஆன் டூட்டி" படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

3 hours ago 2

மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் குஞ்சாக்கோ போபன். இவரது நடிப்பில் கடந்த ஆண்டு 'போகையின்வில்லா' என்ற படம் வெளியானது. அதில் பகத் பாசிலுடன் இணைந்து நடித்துள்ளார். இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

அதனை தொடர்ந்து, 'ஆபிஸர் ஆன் டூட்டி' என்ற படத்தில் நடித்துள்ளார். கடந்த 20-ந் தேதி வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் பிரியாமணி கதாநாயகியாக நடித்துள்ளார். ஷாகி கபீர் எழுத்தில் ஜித்து அஷ்ரப் இயக்கிய படத்தின் வரவேற்பால் திரைகளின் எண்ணிக்கை அதிகமாகி உள்ளது.

இந்நிலையில் "ஆபிஸர் ஆன் டூட்டி" படம் தமிழில் வரும் 14-ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. படத்தின் தமிழ் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

#OfficerOnDuty Tamil trailer is Out now, Grand release on March 14th..⭐Link: https://t.co/Dv9PQEVBwF pic.twitter.com/zesBMRojdd

— Laxmi Kanth (@iammoviebuff007) March 4, 2025
Read Entire Article