ஆன்லைனில் வாங்கிய கடனை செலுத்த முடியாததால் இளைஞர் தற்கொலை

6 months ago 22

சென்னை,

செங்கல்பட்டு அடுத்த அனுமந்த புத்தேரி பகுதியை சேர்ந்தவர் யுவராஜ் (27 வயது). இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சுபாஷினி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இவருக்கு 6 மாத கைக்குழந்தை உள்ளது. இந்த நிலையில் யுவராஜ் செங்கல்பட்டு பகுதியில் உள்ள இருசக்கர வாகன சர்வீஸ் சென்டரில் பணிபுரிந்து வந்தார். கடந்த ஒரு மாதமாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது பண தேவைக்காக ஆன்லைன் செயலி மூலம் கடன் பெற்றுள்ளார். கடனை திருப்பி செலுத்த கூறி யுவராஜுக்கு ஆன்லைன் செயலி மூலம் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த யுவராஜ் தனது வீட்டில் சேலையால் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து செங்கல்பட்டு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Read Entire Article