'உதகையின் குளுமையை அம்மக்களின் இனிமை மிஞ்சியது': முதல்-அமைச்சர் நெகிழ்ச்சி

4 hours ago 3

நீலகிரி,

கோடைவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான 127-வது மலர் கண்காட்சி ஊட்டி அரசினர் தாவரவியல் பூங்காவில் இன்று தொடங்கியது. கண்காட்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் அங்கு பல வண்ண மலர்களை கொண்டு வடிவமைக்கப்பட்டு இருந்த பொன்னியின் செல்வன் அரண்மனை, கரிகாலன் கல்லணை உள்ளிட்டவற்றை பார்வையிட்டார்.

இந்நிலையில், இது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

"பெரும்புலவர் கபிலர் குறிஞ்சிப்பாட்டில் பாடிய மலர்களை, மலர்மாரி பொழிகின்றேன் என முத்தமிழறிஞர் கலைஞர் சங்கத்தமிழில் சொல்லியது சிந்தையில் தோன்ற, உதகை 127-ஆவது மலர்க்காட்சியைத் தொடங்கி வைத்தேன். உதகையின் குளுமையை அம்மக்களின் இனிமை மிஞ்சியது!"

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

பெரும்புலவர் கபிலர் குறிஞ்சிப்பாட்டில் பாடிய மலர்களை, மலர்மாரி பொழிகின்றேன் என முத்தமிழறிஞர் கலைஞர் சங்கத்தமிழில் சொல்லியது சிந்தையில் தோன்ற, உதகை 127-ஆவது மலர்க்காட்சியைத் தொடங்கி வைத்தேன்.உதகையின் குளுமையை அம்மக்களின் இனிமை மிஞ்சியது! pic.twitter.com/pVcC3CPJyR

— M.K.Stalin (@mkstalin) May 15, 2025
Read Entire Article