கமுதி, நவ.21: கமுதி அருகே ஆனையூர் கிராமத்தில் உள்ள மஹான் மதனமீரா ஒலியுல்லாஹ் கந்தூரி விழா மற்றும் சந்தனம் பூசும் விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. விழாவில் பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கலந்து கொண்டு விழாவினை துவக்கி வைத்து பேசினார். விழாவில், முன்னாள் எம்பி செல்வகுமார், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தமிழ்செல்வி போஸ், துணைத் தலைவர் சித்ரா தேவி அய்யனார், கமுதி பேரூராட்சி தலைவர் அப்துல் வஹாப்சகாராணி, முதுகுளத்தூர் பேரூராட்சி தலைவர் ஷாஜகான், கமுதி திமுக மத்திய ஒன்றிய செயலாளர் சண்முகநாதன் மற்றும் முதுகுளத்தூர், கடலாடி பகுதி ஒன்றிய செயலாளர்கள், கமுதி வட்டார காங்கிரஸ் தலைவர் பழக்கடை ஆதி, ஊராட்சி மன்ற தலைவர் காவடிமுருகன் மற்றும் ஆனையூர் முஸ்லீம் ஜமாத்தினர் பலர் கலந்து கொண்டனர்.
The post ஆனையூரில் கந்தூரி விழா appeared first on Dinakaran.