
பொள்ளாச்சி,
பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோயில் குண்டம் திருவிழா கடந்த மாதம் 29ம் தேதி தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் நிகழ்ச்சி இன்று காலை துவங்கியது.
41அடி நீள குண்டத்திற்கு கோவில் பூசாரிகள் மற்றும் முறைதாரர்கள் தீபாராதனை காட்டப்பட்டு, பூப்பந்து உருட்டி, மாசாணி அம்மன் கோயில் பூசாரி மற்றும் முறைதாரர்கள் குண்டத்தில் முதலில் இறங்கினர். இதனை தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை வழிபட்ட வாரே மாசாணி தாயே போற்றி என்ற கோஷத்துடன் குண்டத்தில் இறங்கி தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர்.
ஆயிரக்கணக்கான பக்தர்களின் வருகையை ஒட்டி டி.ஐ.ஜி. சசி மோகன் மேற்பார்வையில் கோவை மாவட்ட கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவின் பெயரில் ஆனைமலை காவல் நிலைய துணை கண்காணிப்பாளர் ஸ்ரீநிதி தலைமையில் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.