ஆந்திராவில் மாம்பழம் ஏற்றி சென்ற லாரி விபத்து: 9 பேர் பலி

3 hours ago 3

ஐதராபாத்,

ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தில், ரெட்டிபள்ளி செருவு கட்டா அருகே புல்லம்பேட்டை மண்டலத்தில்

ரெயில்வே கோடூரில் இருந்து மாம்பழங்களை ஏற்றிக்கொண்டு ராஜம்பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்த டெம்போ லாரி எதிர்பாராத விதமாக சாலையில் இருந்த மணலில் சிக்கி கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் 9 பேர் பலியாகினர். 11 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாம்பழ அறுவடைக்காக பணியமர்த்தப்பட்டிருந்த சுமார் 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இதில் பயணித்ததாக கூறப்படுகிறது. நேற்று இரவு 9:30 மணியளவில் கோர விபத்து நடந்துள்ளது.

விபத்து குறித்து முதற்கட்ட விசாரணையில், லாரி டிரைவரின் கவனக்குறைவே இந்த துயர சம்பவத்திற்கு காரணம் எனத் தெரியவந்துள்ளது. விபத்து நடந்த இடத்தில் சாலை மிகவும் மோசமாக இருந்ததாகவும், லாரி அதிவேகத்தில் சென்றதாகவும் உள்ளூர் மக்கள் தெரிவித்தனர். காயமடைந்தவர்களில் நான்கு பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும், அவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த விபத்து குறித்து புல்லம்பேட்டை காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் தப்பியோடியதாகவும், அவரை போலீசார் தேடி வருகின்றனர். மேலும், சம்பவ இடத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட சிசிடிவி காட்சிகள் மற்றும் சாட்சியங்களின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த கோர விபத்து, அன்னமய்யா மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆந்திர மாநில அரசு இரங்கல் தெரிவித்துள்ளது மற்றும் காயமடைந்தவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Read Entire Article