
துபாய்,
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. அதன்படி ஜூன் மாத சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகள் கொண்ட பரிந்துரை பெயர் பட்டியலை ஐ.சி.சி. அறிவித்திருந்தது.
அதன்படி ஜூன் மாத சிறந்த வீரர் விருதுக்கான பரிந்துரை பெயர் பட்டியலில் தென் ஆப்பிரிக்காவின் எய்டன் மார்க்ரம் மற்றும் ரபடாவும், இலங்கை வீரரான பதும் நிசங்காவும் இடம் பெற்றிருந்தனர். இவர்களில் மார்க்ரம் ஜூன் மாத சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதேபோல் சிறந்த வீராங்கனைக்கான பரிந்துரை பெயர் பட்டியலில் ஹேய்லி மேத்யூஸ் (வெஸ்ட் இண்டீஸ்), தஸ்மின் பிரிட்ஸ் (தென் ஆப்பிரிக்கா) மற்றும் அபி பிளெட்சர் (வெஸ்ட் இண்டீஸ்) ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இவர்களில் சிறந்த வீராங்கனையாக ஹேய்லி மேத்யூஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் இந்த விருதை பெறுவது இது 4-வது முறையாகும்.
