தமிழ்நாடு மருத்துவ வாரிய வேலை வாய்ப்பு; 60 பணியிடங்கள்- யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

5 hours ago 2

சென்னை,

தமிழ்நாடு மருத்துவ வாரியத்தில் காலியாக உள்ள லேப் டெக்னிசீயன் எனப்படும் ஆய்வக நுட்புனர் பணியிடங்களை நிரப்ப மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மொத்தம் 60 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இது பற்றிய விவரங்கள் வருமாறு:

காலியிடங்களின் எண்ணிக்கை: 60

கல்வித் தகுதி: மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் பட்டயப் படிப்பு படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 35400 – 130400

வயது வரம்பு: 01.07.2025 அன்று 18 வயது முதல் 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு முறை: மெரிட் லிஸ்ட் அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 10 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் 20%க்கும், 12 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் 30%க்கும் மற்றும் டிப்ளமோ மதிப்பெண்கள் 50%க்கும் கணக்கிடப்படும். எழுத்து தேர்வு , நேர்முகத் தேர்வு கிடையாது. நேரடி முறையில் நியமனம் நடைபெறுகிறது

விண்ணப்பிப்பது எப்படி: http://www.mrb.tn.gov.in/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினருக்கு ரூ. 600, எஸ்.சி/எஸ்.டி உள்ளிட்ட பிரிவினருக்கு ரூ. 300

விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.07.2025

தேர்வு அறிவிப்பை படிக்க: https://www.mrb.tn.gov.in/

Read Entire Article