
ஐதராபாத்,
சீரடி ஹிசாரில் இருந்து திருப்பதி சென்ற ரெயிலின் 2 பெட்டிகள் திடீரென தீப்பற்றியது. இது குறித்து தகவலிறந்த ரெயில் டிரைவர் உடனடியாக மற்ற பெட்டிகள் கழற்றி விடப்பட்டு ரெயில் நிலையத்திற்கு கிழக்கே பீமாஸ் ரெசிடென்சி ஹோட்டலுக்குப் பின்னால் தண்டவாளத்தில் நிறுத்தினார்.
தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பயணிகள் யாரும் இல்லாததால் உயிர்ச்சேதம் எதுவும் இல்லை. விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. தீ விபத்து குறித்து திருப்பதி ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.