ஆந்திரா: பெண்களின் வேலைவாய்ப்புகளை அதிகப்படுத்தவும் வேலை, வாழ்க்கை சமநிலையை மேம்படுத்தவும் WORK FROM HOME திட்டத்தை ஆந்திர பிரதேசத்தின் புதிய ஐடி கொள்கையில் செயல்படுத்த உள்ளதாக அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். பெண்கள் தங்கள் சொந்த ஊர்களில் இருந்தே பணி செய்யும் வகையில், ஒவ்வொரு மாநகரம், நகரம், மண்டலத்தில் COWORKING SPACE எனப்படும் பகிர்ந்து பயன்படுத்தும் வகையில் ஐடி அலுவலகங்கள் அமைக்கவும், கிராமப்புரங்களில் வேலைவாய்ப்புகள் உருவாக்கவும் ஐடி நிறுவனங்களுக்கு ஊக்குவிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
The post ஆந்திராவில் பெண்களுக்கு WORK FROM HOME திட்டம்: முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு appeared first on Dinakaran.