
அமராவதி,
ஆந்திர பிரதேசத்தில் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 8 பேர் பலியான சம்பவத்திற்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவரான ஜெகன் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்து உள்ளார்.
ஆந்திர பிரதேசத்தின் அனகாபள்ளி மாவட்டத்தில் கொடாவுரட்லா பகுதியில் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த ஆலையில் இன்று திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் தொழிலாளர்கள் 8 பேர் பலியானார்கள். பலர் காயமடைந்தனர்.
இதுபற்றி மாவட்ட கலெக்டர், எஸ்.பி. மற்றும் உள்துறை மந்திரி அனிதா ஆகியோரிடம் பேசிய முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, இந்த சம்பவம் பற்றி விரிவான விசாரணை மேற்கொள்ளும்படி, உத்தரவிட்டு உள்ளார்.
இதேபோன்று, முன்னாள் முதல்-மந்திரி மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவரான ஜெகன் மோகன் ரெட்டி ஆழ்ந்த வருத்தம் தெரிவித்து உள்ளார். மாநில அரசு, பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர்களுக்கு முழு அளவில் ஆதரவளிக்க வேண்டும் என்றும் அவர் அப்போது கேட்டு கொண்டார்.