
தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள தலைவன்வடலி கிராமம், வடக்கு தெருவைச் சேர்ந்த கேசவன், ஆத்தூர் பேரூராட்சி கவுன்சிலராக உள்ளார். இவரது மகன் சதீஷ் (வயது 30), இன்று காலை வேலை விஷயமாக தூத்துக்குடிக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். புல்லாவெளி அருகே சென்றபோது, தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் நோக்கி சென்ற லாரி, சதீஷ் பைக் மீது மோதியது.
இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் மருத்துவமனை செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஆத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரியை ஓட்டி வந்த ராமநாதபுரம், அண்ணாநகரைச் சேர்ந்த காட்டுராஜா மகன் தட்சனாமூர்த்தி(55) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.