மதுராந்தகம்: சோத்துப்பாக்கம் ஊராட்சியில் ஆதிபராசக்தி மெட்ரிகுலேஷன் பள்ளி என்எஸ்எஸ், என்சிசி மாணவர்களின் சிறப்பு முகம் நடைபெற்றது. இதில், கிராம சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு பேரணிகளை நடத்தினர். செங்கல்பட்டு மாவட்டம், சோத்துப்பாக்கம் ஊராட்சியில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் சார்பில் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்களால் மற்றும் தேசிய மாணவர் படை சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு பேரணி மற்றும் சுகாதாரப் பணிகள் முகாம் கடந்த ஒரு வார காலமாக தொடர்ந்து நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிகளுக்கு ஆதிபராசக்தி குழும பள்ளிகளின் தாளாளர் ஸ்ரீதேவி பங்காரு தலைமை தாங்கினார். இதில், பள்ளி முதல்வர் அன்புராஜா, உதவி முதல்வர். கார்த்திகேயன், துணை முதல்வர் அமுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும், நாட்டு நலப்பணி திட்டத்தின் ஆய்வாளர் ராஜ்குமார் அனைவரையும் வரவேற்றார்.
இந்நிகழ்வில், நாட்டு நல பணி திட்ட மாணவர்களும், தேசிய மாணவர் படை சார்ந்த மாணவர்களும் கலந்துகொண்டு சோத்துப்பாக்கம் ஊராட்சியில் உள்ள ஊராட்சி மன்ற கட்டிடம், இ – சேவை மையம், நியாய விலைக் கடை, கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து ஒரு வார காலம் அங்கேயே தங்கியிருந்து தூய்மை பணியில் ஈடுபட்டனர்.
மேலும் கிராம சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு பேரணியும் நடத்தினர். இந்த பேரணியை ஊராட்சி மன்ற தலைவர் ஸ்ரீதர் தொடங்கி வைத்தார்.இதில் மாவட்ட நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் தயாளன் உள்ளிட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி இறுதியாக தேசிய மாணவர் படை குழுமத்தின் தலைவர் அஸ்வின் நன்றி கூறினார்.
The post ஆதிபராசக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் என்எஸ்எஸ், என்சிசி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.