ஆதிதிராவிடர் பள்ளி மாணவிகள் விடுதியில் முதல்வர் அதிரடி ஆய்வு: இட்லி சாப்பிட்டு பரிசோதித்தார்

2 weeks ago 2


முதல்வர் மு.க.ஸ்டாலின் காரைக்குடியில் நேற்று மாலை திமுக கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றார். கூட்டத்தை முடித்துக் கொண்டு இரவு திரும்பும்போது, புது பஸ் ஸ்டாண்ட் அருகே ஆதிதிராவிடர் பள்ளி மாணவிகள் விடுதி முன் வாகனத்தை நிறுத்துமாறு கூறினார். திடீரென யாரும் எதிர்பாராத வகையில் விடுதிக்குள் நுழைந்து ஆய்வு செய்தார். அப்போது, அங்குள்ள மாணவிகளிடம், இங்கு தங்குவதற்கு போதுமான வசதிகள் உள்ளதா? உணவு தரமாக உள்ளதா? அடிப்படை வசதிகள் இருக்கிறதா என கேட்டார்.

அதற்கு அவர்கள், உணவு தரமாக வழங்கப்படுவதாகவும், தங்குவதற்கு ஏற்ற வகையில் உள்ளதாக தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து விடுதி சமையலறைக்கு சென்ற முதல்வர், அங்கு மாணவிகளின் இரவு உணவான இட்லியை சாப்பிட்டு பார்த்தார். பின்னர் சமையலரிடம், ‘நன்றாக உள்ளது. இதேபோல தரமாக உணவை தயார் செய்யவும்’ என்று கூறினார். தொடர்ந்து விடுதி காப்பாளரிடம், மாணவிகளுக்கு எந்த குறையும் நேராதபடி கவனமாக பார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.

The post ஆதிதிராவிடர் பள்ளி மாணவிகள் விடுதியில் முதல்வர் அதிரடி ஆய்வு: இட்லி சாப்பிட்டு பரிசோதித்தார் appeared first on Dinakaran.

Read Entire Article