ஆதி நடித்துள்ள 'சப்தம்' படத்திற்கு 'யு/ஏ' தணிக்கை சான்றிதழ்

3 hours ago 1

சென்னை,

இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் 2009-ம் ஆண்டு வெளியான 'ஈரம்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதில் நடிகர் ஆதி, சிந்து மேனன், நந்தா துரைராஜ், சரன்யா மோகன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படத்தின் வெற்றிக்கு பின்னர் 14 ஆண்டுகள் கழித்து மீண்டும் நடிகர் ஆதியுடன் கூட்டணி அமைத்து 'சபதம்' என்ற படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் அறிவழகன்.

இப்படத்தில் ஆதியுடன் சிம்ரன், லைலா, லட்சுமி மேனன், ரெடின் கிங்ஸ்லி, எம்.எஸ்.பாஸ்கர், ராஜீவ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். 7ஜி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க தமன் இசையமைத்துள்ளார். ஈரம் படத்தை போலவே இந்த படமும் சஸ்பென்ஸ், திகில் பாணியில் உருவாகியுள்ளது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகி வைரலானது.

ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில், தற்போது படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இப்படம் வருகிற வருகிற 28-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில், இப்படத்திற்கு தணிக்கை வாரியம் 'யு/ஏ' சான்றிதழ் கொடுத்துள்ளது. 

Something different is coming your way! SABDHAM overseas release by Ayngaran International! Get ready for an experience like never before from Feb 28! #SabdhamFromFeb28Starring - Aadhi - Lakshmi Menon - Simran - Laila - Redin Kingsley Music - #ThamanS Directed by -… pic.twitter.com/7iKsJbM4JD

— Ayngaran International (@Ayngaran_offl) January 31, 2025
Read Entire Article