ஆட்டோ-வேன் மோதல் தந்தை, மகள் பலி

1 day ago 3

ஸ்ரீவில்லிபுத்தூர்: விருதுந கர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அத்திகுளம் காலனியை சேர்ந்தவர் செல்வம்(46). ஆட்டோ டிரைவர். மகள் சுமித்ரா(18). கல்லூரி மாணவி. தொடர் விடுமுறை காரணமாக சுமித்ரா சொந்த ஊருக்கு வந்திருந்தார். நேற்று மாலை மீண்டும் கல்லூரிக்கு செல்ல சுமித்ராவை, செல்வம் தனது ஆட்டோவில் அழைத்துச் சென்றார். ஸ்ரீவில்லிபுத்தூர் – சிவகாசி ரோட்டில் மாயத்தேவன்பட்டி விலக்கு அருகே ஆட்டோ சென்று கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக வந்த கொரியர் வேன், பைக் ஆகியவை திடீரென கட்டுப்பாட்டை இழந்து அடுத்தடுத்து ஆட்டோவில் மோதின. இதில் ஆட்டோவில் சென்ற செல்வம், அவரது மகள் சுமித்ரா ஆகியோர் சம்பவ இடத்திலேயே படுகாயமடைந்து உயிரிழந்தனர். பைக்கில் வந்த கார்த்திகைப்பட்டி காலனி கல்லூரி மாணவர் பூபதி ராஜா(19) படுகாயமடைந்தார்.

The post ஆட்டோ-வேன் மோதல் தந்தை, மகள் பலி appeared first on Dinakaran.

Read Entire Article