திருவாரூரில் ரூ.5 கோடியில் பதிவாளர், சார் பதிவாளர் அலுவலகம் கட்டுமான பணி தொடக்கம்

3 hours ago 1

*கலெக்டர், எம்பி, எம்எல்ஏ பங்கேற்பு

திருவாரூர் : திருவாரூர் மாவட்ட பதிவாளர், சார் பதிவாளர் அலுவலகம் புதிய கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு பணி நேற்று நடைபெற்றது. இதனை கலெக்டர் மோகனச்சந்திரன், எம்பி செல்வராஜ் மற்றும் எம்எல்ஏ பூண்டி கலைவாணன் ஆகியோர் துவக்கி வைத்தனர். திருவாரூர் மாவட்ட பதிவாளர் மற்றும் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு ரூ.5 கோடியில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு பணி நடைபெற்றது.

வணிகவரித்துறை மற்றும் பத்திரப்பதிவு துறையின் கீழ் இயங்கி வரும் திருவாரூர்மாவட்ட பதிவாளர் அலுவலகம் மற்றும் சார் பதிவாளர் அலுவலகம் என 2 அலுவலகங்களும் திருவாரூர் விஜயபுரம் அக்ரஹார தெருவில் வாடகை கட்டிடம் ஒன்றில் இயங்கி வருகிறது. இந்நிலையில் இந்த 2 அலுவலகத்திற்கும் சொந்த கட்டிடம் கட்டுவதற்கு கலெக்டர் அலுவலக வளாகத்தில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு இதற்காக புதிய கட்டிடம் கட்டுவதற்கு அரசு சார்பில் ரூ ஐந்தரை கோடி நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து இந்த புதிய கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு பணிநேற்று நடைபெற்றது இதனை கலெக்டர் மோகனச்சந்திரன், எம்பி செல்வராஜ் மற்றும் எம்எல்ஏ பூண்டி கலைவாணன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.இந்நிகழ்ச்சியில் டிஆர்ஓ கலைவாணி, மாவட்ட பதிவாளர் செந்தில்குமார், சார் பதிவாளர் ஐயப்பன், கொரடாச்சேரி ஊராட்சி ஒன்றிய முன்னாள் துணைத் தலைவர் பாலச்சந்தர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post திருவாரூரில் ரூ.5 கோடியில் பதிவாளர், சார் பதிவாளர் அலுவலகம் கட்டுமான பணி தொடக்கம் appeared first on Dinakaran.

Read Entire Article