மலை ரயிலில் பயணிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்

4 hours ago 1

ஊட்டி : கோடை சீசனுக்காக ஊட்டி வரக்கூடிய சுற்றுலா பயணிகள் மலை ரயிலில் பயணிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். நீலகிரி மாவட்டம் ஊட்டி சர்வதேச சுற்றுலா நகரமாக விளங்கி வருகிறது. மேட்டுப்பாளையம் முதல் ஊட்டி வரை இயக்கப்படும் நூற்றாண்டு பழமை வாய்ந்த மலை ரயிலில் பயணிக்க பிற மாநிலங்களில் இருந்து மட்டுமின்றி, பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகளும் ஆர்வம் காட்டுகின்றனர்.

குறிப்பாக ஏப்ரல், மே மாதங்களில் கடைபிடிக்கப்படும் கோடை சீசன், செப்டம்பர் அக்டோர் மாதங்களில் கடைபிடிக்கப்படும் போது சுற்றுலா பயணிகள் அதிகளவு ஊட்டிக்கு வருவது வழக்கம். அவ்வாறு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் முன்கூட்டியே முன்பதிவு செய்து ஊட்டி மலை ரயிலில் பயணித்து இயற்கை காட்சிகளை பார்வையிட்டு மகிழ்வார்கள். சீசனின் போது தென்னக ரயில்வே சேலம் கோட்டம் சார்பில் சிறப்பு ரயில் இயக்கப்படுவது வாடிக்கை.

இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் களை கட்டியுள்ள நிலையில் சுற்றுலா பயணிகள் இ-பாஸ் பெற்று ஊட்டி வந்த வண்ணம் உள்ளனர். அதற்கேற்ப ஊட்டி – குன்னூர், ஊட்டி – கேத்தி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

ஊட்டி வர கூடிய சுற்றுலா பயணிகள் சிறப்பு மலை ரயிலில் பயணித்து மகிழ்ந்து வருகின்றனர். இதனால் ஊட்டி ரயில் நிலையத்தில் எப்போதும் கூட்டம் காணப்படுகிறது. மேலும் அங்குள்ள பழமை வாய்ந்த ரயில் என்ஜின் முன் நின்று புகைப்படமும் எடுத்து மகிழ்கின்றனர்.

 

The post மலை ரயிலில் பயணிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம் appeared first on Dinakaran.

Read Entire Article