திருச்சி பிப்.15: திருச்சி பாலக்கரை பகுதியில் ஆட்டோ கண்ணாடியை உடைத்த வழக்கில் 2 பேரை போலீசார் அவர்களிடமிருந்து 96 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். மேலும் இந்த வழக்கில் 4 பேரை தேடி வருகின்றனர். திருச்சி பாலக்கரை கெம்ஸ்டவுன் செபஸ்தியார்கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் அருண் பிரான்சிஸ் ராஜ் (39). ஆட்டோ டிரைவரான இவரது வீட்டின் அருகே கடந்த 12ம் தேதி மாலை ஆட்டோவில் அமர்ந்து 6 பேர் கொண்ட மர்ம கும்பல் சத்தம் போட்டனர். இதனை கண்ட அருண் பிரான்சிஸ ராஜ் தட்டி கேட்டார். இதில் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது அந்த கும்பல் அருண் பிரான்சிஸ் ராஜை மிரட்டி ஆட்டோவின் முன்பக்க கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினர். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிந்து பாலக்கரை கெம்ஸ் டவுன் பகுதியை சேர்ந்த மேத்தியூ (25), பாலக்கரை முதலியார்சத்திரம் நடுத்தெரு பகுதியை சேர்ந்த முகமது சபிக்கனி (22) ஆகிய 2 பேரை பாலக்கரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 96 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்தனர். மேலும் ஆயுதங்களுடன் தப்பியோடிய அந்தோணி , சஞ்சய், சிம்சன், ராபர்ட் வின்ஸ்லி ஆகிய நான்கு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
The post ஆட்டோ கண்ணாடியை உடைத்த வழக்கில் கைது செய்யப்பட்ட 2 பேரிடம் போதை மாத்திரைகள் பறிமுதல் appeared first on Dinakaran.