ஆட்டமிழந்து சென்றபோது எல்லை மீறி விமர்சித்த ரசிகர்கள்.. விராட் கோலி கொடுத்த ரியாக்ஷன்.. வைரல்

3 weeks ago 3

மெல்போர்ன்,

இந்தியா - ஆஸ்திரேலியா இடையே பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் 4-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 474 ரன்கள் குவித்தது.

இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்களுடன் தடுமாறி வருகிறது.

இதில் 51 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இந்திய அணியை ஜெய்ஸ்வால் - விராட் கோலி பார்ட்னர்ஷிப் அமைத்து மீட்டெடுத்தனர். 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் இந்த ஜோடி பிரிந்தது. 82 ரன்கள் அடித்த நிலையில் ஜெய்ஸ்வால் ரன் அவுட் ஆனார். அவரை தொடர்ந்து சிறிது நேரத்திலேயே விராட் கோலி 36 ரன்களில் கேட்ச் முறையில் ஆட்டமிழந்தார்.

விராட் கோலி ஆட்டமிழந்து பெவிலியன் சென்றபோது ஆஸ்திரேலிய ரசிகர்கள் கலாய்த்தனர். அதனை பொறுத்துக்கொண்டு சென்று கொண்டிருந்த விராட் கோலியை சிலர் எல்லை மீறி விமர்ச்சித்துள்ளனர். இதனால் கோபமடைந்த விராட் திரும்பி வந்து அவர்களை முறைத்து பார்த்தார்.

இதனைக்கண்ட அங்கிருந்த பாதுகாவலர் கோலியை சமாதானம் செய்து திருப்பி அனுப்பி வைத்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Really disrespectful behavior with country's best batter. Criticism is ok, but abuse crosses the line. Upholding the spirit of cricket and supporting our players with dignity.#ViratKohli #INDvsAUS #AUSvIND pic.twitter.com/NnZPDkeOs7

— Sanjana Ganesan (@iSanjanaGanesan) December 27, 2024

இதனைக்கண்ட இந்திய ரசிகர்கள் விராட் கோலிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர். 

Read Entire Article